நன்றி கெட்ட மகனைப்போல்
தலைப்பிள்ளை கல்யாணம்
பார்த்து பார்த்து
செய்தேன்
என் வசதி என்னவென்று
பார்க்காமல்
...
அது இருந்தா நல்ல இருக்கும்
இது இருந்தா நல்ல இருக்கும்
கேட்டு கேட்டு
வாங்கிக்கொண்டாய்
வேண்டியதெல்லாம்
நீ இருக்கும்
தைரியத்தில்
கடன் மேல் கடன்
வாங்கி விட்டேன்
கட்டியவள் பேச்சை
கேட்காமள்...
சேமிப்பை எல்லாம்
செலவழித்து விட்டேன்
உனக்கடுத்து நாலு பிள்ளை
என்று யோசிக்காமல்
என் பிள்ளை மாதிரி பார்த்துக்குவேன்ப்பா
என்று நீ சொன்ன வார்த்தையை நம்பி
காதலித்தவலையே
கல்யாணம் கட்டி
காரியத்தோடு
தனிகுடுத்தனமும்
போய் விட்டாய்
தனக்கென
ஒரு வீடு வாங்கிவிட்டாய்
உன்னப்பன்
சொந்தவீடு இழந்து
வாடகை வீட்டுக்கு
வந்தது தெரிந்தும்
புதிதாக காலி மனை
புஞ்சை நிலம் மனைவி பெயரில்
பத்திரம்
பத்திரம் வைத்து
வாங்கிய கடனுக்காக
ஜப்தி ஆகி விட்டது
நான் சேர்த்த சொத்துகள் எல்லாம்
கேட்டதற்கு முன்னே
துணிமணி வாங்கி தந்தவன்
நான் அன்று
இன்று
தீபாவளி என்றுவரும்
அண்ணன் துணிமணி
வாங்கி வருவான்
என்று ஏங்க வைத்துவிட்டையாட.....
கட்டியவள்
குனிய முடியவில்லையாம்
மறுநாளே வந்துவிட்டது
வாஷிங் மெசின்
பீத்துணி மூத்துணி
துவைத்தவள்
இன்றும் துவைக்கிறாள்
அதே ஆத்துபாறையில்
குறுக்கொடிய...........
கண்ணு கெட்டு போகம இருக்க
எல்சிடி டிவி
பக்கத்து வீட்டில் டிவி பார்க்கும்
உன் தம்பி தங்கை
புரை விழுந்த கண்ணுக்கு
இலவச ஆபரேஷன் பார்க்க சொல்லிட்டு
கீறல் விழுந்த வண்டி கண்ணாடிக்கு
புதுசு வாங்கிட்டு வர சொல்லி காசு கொடுக்கிறாய்
எல்கேஜி படிக்கவே 40000 பீஸ்
படிப்பை விட்டு விட்டு
பீடி சுத்தும் தங்கை
இஞ்சினியர் படிக்க மார்க் இருந்தும்
மளிகை கடையில
பொட்டணம் போடும் தம்பி
இத்தனை நாளும்
பொறுத்துகிட்டேனடா
நீ செஞ்சதையும்
செய்ய மறந்ததையும்
கடனை
நினைவுறுத்த வந்தவனிடம்
கேட்டாயே ஒரு கேள்வி....
ரிட்டயர்டு பணத்தை
என்ன பண்ணுனீங்க.....????
உனக்காக தானே
இத்தனை செய்தேன் என்றால்
நானா கேட்டேன் என்கிறாய்...!!
இதுநாள் வரை
அஞ்சு காசு கொடுக்காதவன்
அத்தனை பேர் முன்னிடம் கேட்டாயே
இன்னும்
எத்தனை நாள் தான்
என்கிட்டையே கேப்பீங்க
எனக்கும் புள்ள குட்டி இருக்கு என்று...
தலைப்பிள்ளை தான்
கொல்லி வைக்கனுமாம்
வைத்துவிட்டையாட
ஊர் பார்க்க
உயிரோடு.................
மரித்தும்
உன்னை
சபிக்க மாட்டேன்
உனக்கும்
ஒரு தலைப்பிள்ளையாய்
ஆண் பிள்ளை இருக்கிறான்..