நூற்றாண்டு காலம்
"வேகமாய் ஓடி
மறையும்
வேண்டாத காலமதில்
துன்பங்கள் மறைந்தோட
தூரம் நான்
சென்ற போது
துச்சமாய் என்னை
நீயும் மறந்தாயோ?
உயிரே
உன்முகம் காணாத
முகவரி எதற்கு?
சிலவார்த்தைகள் போதுமே
தொடர்ந்திரு
நம் உறவை,
நூற்றாண்டு காலம்
நிலைத்திட.."
--