கோலம் தாண்டி...

தெருவில் உன் கோலம்
தாண்டி செல்ல
முடியாமல்
புள்ளியில் புறப்பட்டு
விரல் நுணியில்
வழிகிறேன்
கோலமாய்,

கிள்ளியெடுக்கும்
கிண்ணத்தில் என்
கண்ணம் இருப்பதாய்
மறுமுறையும்
கிள்ளக்கேட்கிறேன்,

விரலிடுக்கில்
உயிர்ப்பிக்கிறாய்
பூக்களை,
மலரும்
உன் முகம்
பார்த்து,

ஈரமான தெரு மண்
ஈரமாக்கியதொரு பெண்
இந்த கோலம் காண
மதியத்திற்க்கு
மத்தியிலும்
ஒரு விடியல்
வேண்டும்.

எழுதியவர் : சபீரம் sabeera (2-May-13, 3:02 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : kolam thaanti
பார்வை : 66

மேலே