யோசித்தால் யோசிக்க வைப்பவை (5)

இறந்தால் பிரிந்துவிடும் உயிரைவிட
தன்னுள்ளே தங்கிவிடும் கண்ணீரே உயர்ந்தது......

ஆணுக்குள் பெண் விழித்திருப்பாள் காதலில்
பெண்ணுக்குள் ஆண் விழித்தெழுவான் மோதலில் .............

பேனாவை மூடாதே மூடினால் உனது எண்ணத்துக்கும்
மூடி போட்டுவிடும் அந்த பேனா ......

சர்க்கரையும் உப்பும் நிறத்தில் வெள்ளை
பிரித்தறியும் நாக்கே உண்மை .........................

தள்ளாடும் தமிழன் தப்பாமல் சொல்கிறான்
ஐ ஆம் ஸ்டெடி ...................

என் காதலை ஏற்றப்போது அழகாக இருந்தாய்
வெறுத்த போது இன்னும் அழகாக இருக்கிறாய் ............

மழை வேண்டி யாகத்துக்கு
மரம் தான் உணவு .........................

பணக்கார வீட்டில் நாயாக இருப்பதை விட
உன் வீட்டில் பிணமாக இருந்துவிட்டு போ...............

மனமென்ற புதரை புரட்டி பார்த்தால்
அவமானம் தான் அதிகம் இருக்கும் ............

படிக்காதவன் பள்ளி கல்லூரி கட்டி சம்பாதிக்கிறான்
படித்தவன் பாடம் நடத்தி வாழ்க்கையை ஓட்டுகிறான்
இப்போ சொல்லுங்க படிக்கணுமா வேணாமா...... ...........

இன்றைய கல்வி வாழ்கைக்கு உதவுவதில்லை
கடந்த காலத்தை மட்டுமே கற்றுக் கொடுக்கிறது .............

உண்மைக்கு ஆடைகட்டி அலங்காரம் செய்து வருவதற்குள்
பொய் கூசாமல் பாதிஉலகை ஆக்கிரமித்து விடுகிறது..............

எழுதியவர் : bhanukl (2-May-13, 10:55 pm)
பார்வை : 162

மேலே