மாநகர பேருந்து

நகர பேருந்தின்
பயண சீட்டின் விலை உயர்வு
இல்லை…! இல்லை…!
நகரும் பேருந்தின்
பயண சீட்டின் விலை உயர்வு

சில்லறை கொடுத்து பயண சீட்டு பெறவும்
மீதி சில்லறையை கேட்டு பெறவும்

சில்லறை கொள்ளை
அடாவடியாய் அதிகாரமாய்….!

புகை பிடிக்காதீர்….!!

வாகனம் விடும் புகையில் தானே
எங்கள் - வாழ்கையே
நாசமாகி கொண்டிருக்கிறது

அரசாங்க பேருந்து (ஊழியர்கள்)
அரசியல் சாயம் பூசிகொண்டு

இருமல் சத்தத்தோடு ஓடி கொண்டிருக்கும்
இந்த பேருந்துக்கு - எங்கள்
இதய சத்தம் கேட்காது……..!

எழுதியவர் : வ.மெய்யப்பன் (6-May-13, 11:59 pm)
சேர்த்தது : meyyappan
பார்வை : 104

மேலே