எஸ் பி பால நினைவு தினக் கவிதை

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

*S.P பாலசுப்ரமணியன்*
*நினைவுத் தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

இவரதுப் பாடலைத்
தாய் இல்லாதக் குழந்தைகளுக்குத்
'தாலாட்டாகக்' கூட
போடலாம்......!

மூச்சு விடாமல்
பாடியப் பாடல்தான்.....
இவர்
'மூச்சு விட்டப்' பிறகும்
பெயர் சொல்லிக்
கொண்டுள்ளது.....!

எத்தனையோ பேர்களின்
இரவுகள்
இவரதுப் பாடலைக் கேட்டே !
உறங்குகின்றன.....
எத்தனையோ பேர்களின்
காலைகள்
இவரதுப் பாடலகை் கேட்டே! விடிகின்றன......!

பழம் நழுவி
பாலில் விழுவது போன்றது...
இவரது குரல் நழுவி
இளையராஜாவின் இசையில்
விழுவது....

எத்தனை குயில்கள்
இவரதுப் பாடலைக் கேட்டு
பொறாமையில்
நிம்மதி இழந்துதோ?
எத்தனை இதயங்கள்
காயங்களை
ஆற்றிக் கொண்டதோ..?
எத்தனை காகாங்கள்
பாடுவதற்கு
முயற்சி செய்ததோ...?

இவரதுப் பாடலைக் கேட்டால்
அசைகின்ற காற்றும்
நிற்கும்......!
நிற்கின்ற கல்லும்
அசையும்......!

பாடலால் புகழ் பெறுவார்கள்
ஆனால்
இவரால்தான்
பாடலே புகழ் பெற்றது.....!

எஸ். பி. பால
காதலர்களுக்கு
இன்னொரு நிலா ....!!!

களைத்தவர்களுக்கு
இளநீர்...
பசித்தவர்களுக்கு
தேனீர்...

பயணம்
செய்பவருக்கு துணை.....
தனிமையில்
இருப்பவருக்கு அமைதி.....
காதல் தோல்வி
அடைந்தவர்களுக்கு ஆறுதல்...
துன்பப்படுவோருக்குரு தன்னம்பிக்கை.....
தோல்வி
அடைந்தவர்களுக்கு முயற்சி....

மனங்களை
வசியப்படுத்துவதில்
மைக் கூட
இவரதுப் பாடலுக்கு
அடுத்தப்படி தான்....

இவர்
பிறந்ததற்காக
பாடுபவர் அல்லர்
பாடுவதற்காகவே !
பிறந்தவர்......!

விருதுகளைக் கொடுத்து
மனிதர்களை
கௌரவிப்பார்கள்...
ஆனால்
இவருக்கு கொடுத்து
விருதுகளை
கௌரவித்தார்கள்....!

இவரிடமிருந்து
நிறையக் கற்றுக்கொண்டது
ஏழு ஸ்வரங்களும்....

இவரது ஊக்கத்தால்
எத்தனையோ மூங்கில்கள்
புல்லாங்குழலாக
மாறியுள்ளது....!

பாடியதால்
மனிதர்கள்
வாழ்ந்திருக்கிறார்கள்...!
ஆனால்....
இவர் பாடியதால் தான்
பாடல்களும் வாழ்கின்றன...!

இவ்வுலகம் உள்ளவரை....
திருவள்ளுவர்
"குறளால்" வாழ்வது போல்
இவரும்
"குரலால் "வாழ்வார்......!!!

வாழ்க அவரது புகழ் !
வளர்க அவரது பெருமை !

*கவிதை ரசிகன் குமரேசன்*

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Sep-24, 9:02 pm)
பார்வை : 22

மேலே