ஒரு பேனா என்ன செய்யும்
உயிர் இல்லாத பேனா இது
உணர்வுள்ள பேனா இது
உலக சரித்திரத்தில்
பங்கு கொண்ட பேனா இது ..........
கூர்வாள் கொண்ட கத்தியும்
தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கியும்
குண்டுகள் நிறைந்த பீரங்கியை காட்டிலும்
வலிமை கொண்டது பேனாவின் கூர் முனை .......
எங்கும் வாடும் அடிமை இனங்கள்
பொங்கி காயும் ரத்த கறைகள்
வன்முறை கொடுத்த மாறா வடுக்கள்
அத்தனையும் மாற்றும் பேனா மை ...........
குப்பையை மாற்றி கோபுரமாக்கும்
கோபுரத்தை சிதைத்து குப்பையாய் ஆக்கும்
அடிமை தலைகளை ஆள வைக்கும்
ஆளும் தலைகளை அடக்கி வைக்கும் .........
அடக்குமுறைகளை வெற்றி கொண்டு
அதர்மங்களை தட்டி கேட்டு
தர்மங்களை போற்றி மதித்து
நீதியை நிலைநாட்டும் ..............
சமுதாய சிக்கல்களுக்கு
சாட்டையடி கொடுக்கும்
சல்லாப தலைகளை
உலகிற்கு காட்டும் ............
அடிமை நிலையை அறவே வெறுத்து
புரட்சி செய்து விடியல் விதைத்து
சுதந்திர அறுவடை செய்யும் பேனா ............
ஒரு நேரத்தில்
மனிதனின் தலைஎழுத்தையும்
அரசின் ஆட்சியையும்
ஏன் உலக சரித்திரத்தையே கூட மாற்றும் !