குறித்துப் போன நெரித்த நெறி
ஐந்தே நிமிடத்தில் எழுதியது.....
தவறிய குறியில் சரியாகச் சுட்டேன்
குறி தவறவில்லை!
என் கைத்ததுப்பாக்கி
தவறுதலாக வெடித்த போது
என் கை சுட்டது...
சரியான குறி என்றனர்
என் எதிரிகள்!
வீரத்தோடு வெடித்த நான்
துப்பாக்கிப் பெற்று கோழையானேன்
குறியும் நெறியும் தப்பியதால்
ஆறாவது நிமிடத்தில்....
தவறியது குறி - சூடு
பட்ட இடமும் சரி!
தவறிடத் தவறவில்லை குறி
தவறித்தான் வெடித்தது
என் கைத்துப்பாக்கி
சுட்டது என் சுட்ட கை!
இதுவன்றோ குறி என்றனர்
எதிரிகள்!!
வீரத்தோடு வெடித்த நான்
வியர்த்ததென்னவோ துப்பாக்கியை
தொட்ட பயத்தில்!
கோழைத்தனம் குடிகொண்டது
பக்கவாட்டில்!!
தவறிய குறி
தவறாமல் சுட்டது
என் கிலியையும் தான்!
தவறுதல்தான் சுத்த வீரம்!
சும்மாவா
பண்டிதன் மட்டும்
பாலத்தின்மேல் போகவில்லை?
தப்பிய குறியால்
தப்பிப் பிழைத்தது நெறி