கூடங்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ராமதாஸ் - கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் அணு குண்டு தீவிரவாதிகளா...?

ஆம் என்கிறது மத்திய அரசு....அணு உலையை எதிர்ப்பவர்கள் அனைவரும் அணு தீவிரவாதிகள் என்று கூறினார் கடந்த வருடங்களில் பிரதமர்
மன் மோகன் சிங்..அணு தீவிரவாதம் பயங்கரவாதம் என்று கூறினார்.
அறவழியில் போராடிவரும் கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி செப்டம்பர் 3 - 2012 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கோ.கா.மணி அவர்களும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
கூடங்குளம் போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததாக வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கைது செய்ய வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிடி ஆணை பிறப்பித்துள்ளது...எனவே மே 13 - ம் தேதி வரை சிறையில் இருக்க வேண்டும் என்று திருச்சி சிறை சென்று ஆணையை வழங்கியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வன்னியரசு, மார்ச் 23, 2012 அன்று இதே வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், தொல். திருமாவளவன், மதிமுக வின் வைக்கோ, ஜவஹிருல்லா, வேல்முருகன், சீமான், அய்யா பழ. நெடுமாறன், பெ.மணியரசன், குளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் மற்றும் பல அரசியல் கட்சிகள், பல்வேறு சமூக இயக்கங்கள் தலைவர்கள் மீது வழக்கு போட்டுள்ளது தமிழக காவல் துறை...
இவை போக பொதுமக்கள் இரண்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரம் மீது 360 வழக்குகள் போட்டு தள்ளியுள்ளார்கள்...சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அணைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யச் சொல்லியும் நேற்று மருத்துவர் ராமதாஸ் மீது உள்ள கூடன்குள உண்ணாவிரத வலக்கை தள்ளுபடி செய்யாமல் அதே வழக்கில் மீண்டும் கைது செய்திருக்கிறது.
ஆக, 2002 துவக்கத்தில் ஜார்ஜ் புஷ் - ம் டோனி பிளையர் இருவரும் சேர்ந்து இவ்வாறு உலகிற்கு கூறினார்கள்..நீங்கள் எங்கள் பக்கமா...? அல்லது தீவிரவாதிகள் பக்கமா...உங்களுக்கு இரண்டு வழிதான் உள்ளது என்றார்கள்..ஈராக் மீது போர் தொடங்குவதற்கு முன்...
கடந்த ஆண்டுகளில் அண்ணா ஹசாரே போராட்டங்களில் பெருவாரியான நடுத்தர மக்கள் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராக போராடிய போது இவ்வாறு கூறினார் பிரதமர் மன் மோகன் சிங்,
உங்களுக்கு இரண்டு வழிதான் உள்ளன..ஒன்று நாடாளுமன்ற வழியை ஆதரிப்பது...அல்லது மாவோஸ்ட்கள் வழியை தேர்ந்தெடுப்பது என்றார்..ஊழல் ஒழிய வேண்டும் என்று போராடியவர்களுக்கு இந்திய அரசு விட்ட எச்சரிக்கை தான் அது.
என்ன சொல்கிறார்கள் என்றால் போராடாதே...பேசாமல் வாயையும் எனையதையும் மூடிக்கொண்டு இரு..அல்லது வழக்கு என்று மட்டும் அல்ல ஏனைய அனைத்தையும் செய்வோம் என்று சொல்கிறார்கள் மக்களிடம் மக்களுக்கு...!
நமக்கு என்ன ஞாபகம் வருகிறது என்றால் இதே போன்று ஒரு நிலையை அடைந்த மக்கள் தான் பிரஞ்சு புரட்சியை நடத்தினார்கள்..அந்த நிலைக்கு உலகமே தயாராகி விட்டது என்றால் யாராவது மறுக்க முடியுமா...? என்ன.
சங்கிலிக்கருப்பு