அந்நாளுக்கான பீடுநடை– கேஎஸ்கலை

எரிக்கும் சூரியன் வெரித்துப் பார்க்க
ஊரையும் உயிரையும் சாதீ எரிக்கும்
அந்நாள் அறிவான் நெருப்புச் சூரியன்-
தனைவிட தணலில் சுடுமென சாதீ !

பார்ப்பான் எரிவான் பறையனும் எரிவான்,
குளங்களில் குருதியை நிறைக்கும் குலங்கள் !
புழுதியை மறைத்துச் சடலங்கள் குவியும்,
பகுத் தறிவைப்பார்த்து மரங்களும் சிரிக்கும் !

கருகிய சதையும் பருகிட குருதியும் -
வெறிக்குப் பரிசாய் கிடைத்திடும் நாளில்...
கருக்கிய சாதீ முறுக்கிடும் மீசையை
பார்த்திட எவனும் இருந்திட மாட்டான் !

தோலைக் கிழித்தால் பீறிடும் குருதியும்
எரியும் சிதையில் வீசிடும் வாடையும்
எந்த வகுப்பினைச் சார்ந்தது என்பதை
பகுத்துப் பிரித்திடும் அறிவியல் உண்டா?

அண்டம் எங்கும் தாண்டவம் ஆடும்
அறியாமை காட்டுத் தீண்டாமைத் தீயோ,
எமையும் எரிக்கும் விரைவில் ஒரு நாள்
அந்நாள் நோக்கிய பீடுநடைப் பயணமிது !

எழுதியவர் : கே.எஸ்.கலை (9-May-13, 8:34 am)
பார்வை : 264

மேலே