போர்கள்

போர்கள் அது வேண்டாம் வேண்டாம்
வாழ்வே ஒரு போர்தான் நண்பா
புரிந்தால் அறிந்தால் தோளில் சிறகு
உலகம் உனதே தான்.....

தேர்வு பயம் தூக்கி போடு
கேள்வி தாளாய் மாறி பாரு
வானம் பூமி எல்லை இல்லை
வாழ்க்கை உனக்கே தான்.....

சித்தார்த்தன் யுத்தம் சோதித்தான்
மௌனத்தில்,
புத்தன் தான்....
புதுமைகள் சாதித்தான்.

எதார்த்தம் யுத்தங்கள் போதிக்கும்
இருந்தாலும்
பூ வளர்க்கும்...
மானுடம் விதைப்பாயே.

எழுதியவர் : கவிஜி (9-May-13, 7:04 pm)
பார்வை : 90

மேலே