எனக்கும் ஆசைதான்.!!!

கல்யானமான பின்னும்
காதலும் வளரட்டும்.
இருக்கட்டும் இதயத்திலும்.
இயற்கை செழிப்பதிலும்!!
சத்தியம் மீட்க வந்த
சரித்திர மனிதரெல்லாம்.
இரத்தங்கள் கொட்டித்தான்
உத்தமம் நாட்டினார்.
நல்லதை நாட்டுதற்கு
உள்ள உயிர் காவு தந்தார்.
இல்லமும் இதயமும்
ஏற்கட்டும் தூயோரை.
இழவுக்குக் கரைவதை
நிலைமக்கு இரங்கலென
படிகிறாய் பொய் மயங்கி
படித்துங்கூட மெய் மழுங்கி,
உலகமொரு வீடானால்,
உள்ளோரெல்லாம் உறவானால்,
எல்லைகளும் இல்லையென்றால்,
தொல்லைகளும் தொலையாதோ!
எனக்குங்கூட ஆசைதான்
இனிக்கட்டும் வேம்பிலை.!
தனக்கென்று வாழ்வதுடன்
பிறர் நிலையும் உணருவோம்!
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா,.