சிலை பெற்ற அழகு..

சிற்பி உளி கொண்டு செதுக்கிய
சிலை கூட தோற்றுவிடும் ...!
அம்மா நீ....
கருவில் செதுக்கிய சிலையின்
அழகு அறியும்போது...!!

கடவுளே சித்தரித்து
வடிவம் கொடுத்தாலும்...
உன் அனுக்கதிர்களில்
வடிவம் பெற்ற
அந்த அழகு சிலைக்கு ஈடாகுமா????..

உன் திசுக்களையே ..
திசைகளாக கொண்டு..!
உன் இரத்தத்தையே..
இறைச்சி உணவாக சுவைக்க செய்து...
சுவையை கற்றுகொடுத்தாயே...!

உன் உயிருக்குள்
உயிராக உருவாகிய அச்சிலைக்கு...
ஈடாகுமா???
இந்த
உயிரே இல்லாது...
உயிரை பளிவாங்கிக்கொல்கின்ற...
உருவம் இல்லாத...
இந்த
உன்னத கடுவுளின் சிலை???

எழுதியவர் : சுகன்யா raj (9-May-13, 9:43 pm)
சேர்த்தது : suganya raj
Tanglish : silai petra alagu
பார்வை : 131

மேலே