உயிரே உயிலாக

சூரியன் பார்த்து
பூக்கும் பூக்கலெல்லம் உன்
புன்னகை பார்க்கதானடி
அன்பே

உன்னை கண்டு
வெக்கம் கொண்டு
வெண்ணிலவும்
தேயுதடி

துள்ளி ஓடும்
கங்கை நதியும்
உந்தன் பாதம்
தொடத்தானே துடிக்குது

ஆடி வரும்
தோகைமயிலும்
அடங்கிபோனதடி
உன் இடை
ஆட்டம் கண்டுதானே

தத்தி நடக்கும்
குழந்தையும்
துள்ளி ஓடிவருகுதடி
தாவி உன்
கன்னம் தீண்டத்தானே

மண் தரையெல்லாம்
பொன் தரையானதடி
உன் பாதம் பட்ட
பின்புதானே

பட்டுப்பாவாடை போட்ட
பஞ்சவர்ணமே
பத்திஎரியுதடி
உன் பார்வையிலே
என் உயிர்

வார்த்தை ஒன்று சொல்லு
உன் காதலன் நான் என்று
உயிரையே தருகிறேன்
உயிலாக உனக்கே

எழுதியவர் : பூவதி (10-May-13, 3:55 am)
சேர்த்தது : பூவதி
பார்வை : 124

மேலே