ஒரு தினம் போதுமா? தாய்க்கு....

ஒரே ஒரு தினத்தில்
உனை எண்ணிய பின்
மறு தின வேகத்தில்
மறந் திட லியலுமோ?

எவ் விட மாகினும்
எப் பிறப் பேகினும்
எது இணை உனக்கு
எம துயிர்த் தாயே
எமை உயிர்த் தாயே

தமிழ் அமிழ் தென்று
நான் அறிந் ததுவும்
உன் மொழி கேட்டே
பின் அறிந் தேன்.
எது கிடைத் தாலும்
பெரி தல்ல என்றன்
தாய் மடி வேண்டித்
தவ மிருந் தேன்.

மா னுட வாழ்வோ
வே ருயிர் வாழ்வோ
ஈன்ற பொழுதி னின்று
இனி துவத் தகத்தின்
மக வுயிர் காத்து
மன வலி யூட்டி
இன்பம் அன்பில் கூட்டி
எமை வளர்த் தாயே

ஓடிய கால வேஷத்தில்
மீறிய ஆசை வேகத்தில்
ஊறிய மனித வாழ்க்கையில்
மறந்திட லாகா தென்று
மனிதன் செய்த நற்செயல்
அன்னையர் தினமென் றானது.
இவ் வொரு தினம்போ தாதே
இறை உனை வணங்கிடத் தாயே
இயல்புகள் மாறிடும் வாழ் விலே
இனை இலா மாட்சி உண்டெனில்
உனை எண்ணிடும் ஒவ்வோரு பொழுதே
இதை எண்ணிட வேண்டும் உலகே!

தாயவள் ஒருத்தி அருகி ருந்தால்
தயவு செய்வீர் அவளைக் காப்பீர்
தன் னுயிர் தந்து உமைக் காத்தவளை
சுமை என என்றும் எண்ணிடாதீர்.
தனிமையில் வருத்தம் புகுத்தி டாதீர்.
முதியவர் காப்பகம் தள்ளி டாதீர்.
தனை முழுதும் அர்ப்பணித் தாளே- தாயின்
தகைமை அறிவீர் அன்பு செய்வீர்.

இவ் வொரு தினம்போ தாதே
இறை உனை வணங்கிடத் தாயே...
இவ் வொரு தினம்போ தாதே
இறை உனை வணங்கிடத் தாயே...


.....................முகில்

எழுதியவர் : முகில் (12-May-13, 1:47 pm)
பார்வை : 97

மேலே