"ஆமைகளை கண்டறிவோம்"
![](https://eluthu.com/images/loading.gif)
பேண வேண்டிய ஆமைகள்
-------------------------------------------
பிறரின் புகழுக்கு மயங்கி இழிசொல்லுக்கு
இசைந்து பொய்யாமை .......................
நாட்டிற்கு நல்வழிசொல்லும் நற்செயலை செய்வோரை பழிக்காமை.............................
தன்னிலை தாழ்ந்தோரை பரிதவிக்கும் பாதுகையாக்கி இகழாமை ..........................
பிறரை பழிதீர்க்கும் நச்சுநோக்கில்
நலிந்து புறங்கூறாமை ..................................
நற்செயலுக்கு நல்வழியில் பங்குபெற
நாணி நழுவாமை ....................................
தான் கொண்ட தவறுக்கு பிறரை
முன்னிறுத்தி பேசாமை .......................
தீயவழி என்றறிந்தும் திடங்கொண்டு
அவ்வழியே நடவாமை ......................
எப்பதவி வரும் போதும் நேர்மைவிட்டு
முறைதவறி வாழாமை..................
ஏழையாய் இரந்தாலும் தனதற்ற பிறரின்
உழைப்பை களவாமை.............................
பிறரின் சுதந்திரத்தை தனதாக கொண்டு
தடைபோட விரும்பாமை .....................
இன்சொல்லிருக்க வன்சொல்தேடி
திரித்து கூறாமை ......................................
ஒழிக்க வேண்டிய ஆமைகள்
-------------------------------------------
நற்செயலுக்கு நல்லறிவின்றி தடங்கலை தனதாக்கும் கல்லாமை ...............................
தன்னிலையற்ற இழிசெயலுக்கு தவறென்று
தலைகவிழ்ந்து வெக்காமை ..............................
பிறரின் முன்னேற்றம் பொறுக்காமல்
நாம்கொள்ளும் பொறாமை..................
உலகே வெறுக்கும் ஈனசெயலுக்கு
இதுகாறும் வருந்தாமை ................................
தனதுறவு எனகொண்டு தவறென்று
தடுத்து பேசாமை ...................
பதவியில் வாழும்போது பரிதவிப்பவற்க்கு புண்ணியம் செய்யாமை............................
வறியோர் என்றறிந்தும் இரப்போற்கு கொடுமுகம்காட்டி கொடாமை...........................
இது போன்ற ஆமைகளை -
வாழ்வில் அடையாளம்
கண்டு வாழ்வோம்
நாமும் நலம் பெறலாம் -நமது
நானிலமும் நல்வழிபடும்