10.என்னைக் கவர்ந்த கவிதைகள். உங்களையும் கவரும்.

என் தமிழ் மீனவன் வீழ்கிறான் அங்கே....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கால் வயித்த நேரச்சு வெக்க,
கடலுக்குள்ள போவோ நாங்க..
காவலுக்கு வந்ததாரு,
கடல் நீரும் கண்ணீருந்தானே..

எங்க பச்ச மண்ணு உசுரு வாழ
பாதி கடல கடந்தோமே,
ரத்த வெள்ளோ உண்டாக்கி
நீல கடலோட அத நீந்த வச்சான்..

வலையக் கிழிச்சு அவன் வீரனானான்,
அந்த அலையக் கடக்க எங்களால முடியலையே..
அவன் துப்பாக்கி எங்க உசுரக் கற்பழிக்க,
அங்க, எங்க வீரம் கற்ப்பிழந்து செத்துப் போனோமே..

அகதியா ஆனோமே,
அள்ள முடியா சோகம் நெஞ்சுக்குள்ள,
அல்லப் பட்டு ஆளப் பட்டோமே,
அல்லோலப் பட்டு ஆருசுர விட்டோமே..

கட்டுமரத்தோட கடலுக்குள்ள போனா,
வெட்டு முதுகோட கரையோரம் ஒதுங்கறோம்..
ஈழக் காத்தோட இனங்கள் வந்து,
ஈமம் செய்யுது எங்கள இனத்தோட வச்சு..

எங்கள சுட்டுப் போட்டாலு வீதியில
அதத் தட்டிக் கேக்க நாதியில்ல,
ஓட்டு கேட்ட எங்க அரசும்
ஒட்டவில்ல எங்க கிட்ட..

மீன பிடிக்க போன மச்சா,
இப்ப வருவான் அப்ப வருவான்,
எப்ப வருவானுனு ஏங்கி கெடக்க,
வந்ததூ வந்தான்
எரைய புடிச்சுட்டு வரல,
எரயாவே வந்தான்
அவ ஈரகொள நடுநடுங்க..

வயித்துப் பசிக்கு வடிச்சு ஆக்க,
கயத்து மேல நடப்பது போல,
உசுர எடுத்து ஓலைல வச்சு,
ஒத்திக பாக்கறோம் உசுரு போற நாள..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படைப்பை பற்றி நான் சொல்வதை விட வந்த கருத்துக்களையே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!


மங்காத்தா 14-May-2013 12:34 am
வடிகட்டிய சுத்தமான அக்மார்க் சிறப்பு படைப்பு. வியக்கிறேன். மலைக்கிறேன். சிலையாகிறேன் படித்து விட்டு. ப்ரதீப்பிடம் இத்தனை திறன்கள் ஒளிந்து கொண்டிருப்பது இப்போதுதானே தெரிய வருகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Alagusagi 13-May-2013 10:43 pm
அருமை தோழரே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Varsha 13-May-2013 9:12 pm
வயித்துப் பசிக்கு வடிச்சு ஆக்க,
கயத்து மேல நடப்பது போல,
உசுர எடுத்து ஓலைல வச்சு,
ஒத்திக பாக்கறோம் உசுரு போற நாள..

சொல்ல வார்த்தைகள் இல்லை... அருமை... அருமை அருமை...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Kumar balakrishnan 13-May-2013 8:39 pm
எங்கள் மீனவன் உங்கள் அரசில்தட்டில் மீனாகவா தட்டிக்கேட்போம் .....தயாராக இருங்கள்.
அருமை அண்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அஹமது அலி 12-May-2013 9:09 am
பிரதீப் என்ன வார்த்தை சொல்லி பாராட்ட தெரியலப்பா...

மீனவர்களின் முள் வாழ்வை
செதில் செதிலாக செதுக்கி
கூறு கூறாகப் போட்டு
கூவிக் கூவி ஏலம் போட்டு
தராசின் முள் செங்குத்தாக இருக்க
அப்படியே எடை போட்டே..
உன் சொற்படியே நடக்குதுப்பா
மீனவனின் கண்ணீர் வாழ்க்கை!

நெகிழச் செய்த படைப்பு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
bhanukl 12-May-2013 7:00 am
சிறந்த படைப்பு ...கடலில் விழும் கண்ணீர்த்துளி இதயமற்ற அரசியலுக்கு தெரியாது ....வாழ்த்துக்கள் பிரதீப்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
a.n.naveen soft 12-May-2013 1:17 am
அற்புதமான படைப்பு பிரதீப்
வாழ்த்துக்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
sundaravinayagam 11-May-2013 12:10 pm
உணர்வுள்ள படைப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Rajesh Kumar 11-May-2013 11:10 am
நன்று..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : பிரதீப் (14-May-13, 7:49 am)
சேர்த்தது : அஹமது அலி
பார்வை : 111

மேலே