முதல் எழுத்து
அவள் அங்கங்களில் பொன்னகை இல்லை
ஆனால் வாய்முழுக்க புன்னகை
தன் குழந்தை முதல் நாள்
பள்ளிக்குச் செல்லும் மகிழ்ச்சி அவளுக்கு
தன் குழந்தையின் கண்ணிர் துடைத்து
கணவனின் வண்டியில் ஏற்றிவிட்டு
"டா டா" சொல்ல
அந்தக் குழந்தை அவளை நோக்கி கை நீட்டி
வார்த்தை வராமல் சத்தமாக அழ
வண்டி கிளம்பியது பள்ளிக்கு
ஒரு சிலேட்டும் பென்சிலும் வாங்கி கொடுத்துவிட்டு
தந்தை தன் பணிக்குச் செல்ல
வகுப்பறையில் இருந்து வாசலுக்கு செல்கிறது
குழந்தையின் பார்வை விழியில் வழியும் நிரோடு
பிடிக்கத் தெரியாமல் பிடித்திருந்த பென்சிலை
சரிசெய்து அந்த பிஞ்சு விரல்களை பிடித்து
ஆசிரியை விளம்ப அந்த குழந்தை எழுதிய
முதல் எழுத்து "அ"
அரும்பியது புன்னகை குழந்தைக்கும்!!!!!!