எது சுகம் ?

காத்திருத்தல் சுகமா
காக்கப்பட வைப்பது சுகமா

தாயின் ஸ்பரிசம் சுகமா
தந்தையின் கண்டிப்பு சுகமா

மழலைப் பருவம் சுகமா
வாலிப வயது சுகமா

காதல் வயப்படுவது சுகமா
காதலிக்கப் படுவது சுகமா

இல்லற வாழ்வு சுகமா
வரும் ஏற்ற இறக்கம் சுகமா

வசதி வறுமை சுகமா
இன்பம் துன்பம் சுகமா

ரத்த பந்தங்கள் சுகமா
நட்பு வட்டாரம் சுகமா

பதவி புகழ் சுகமா
அறிவு ஆற்றல் சுகமா

நீண்ட ஆயுள் சுகமா
அவனின் அழைப்பு சுகமா

.
.
.
.
.
.

இவற்றிக்கு விடை எழுத
நினைத்த பொழுது

என் பக்கத்திலே வந்து
அமர்ந்த அவன் சொன்னான்

என் அரவணைப்பில் நீ
இருக்கும் வரை யாதும்
சுகமே என்று.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (16-May-13, 11:19 am)
பார்வை : 99

மேலே