கணவர்
![](https://eluthu.com/images/loading.gif)
அழ தோள் கொடுத்த
என் தாயைப் பிரிவதை
எண்ணி கலங்குகையில்
தாயாக தோள் தந்து தேற்றியவர்!
கைப்பிடித்து நடை பயின்றிவித்து வாழ்க்கை ஓட்டத்தைக் கற்றுத் தந்த
என் தந்தையை பிரிவதைத் எண்ணி வருந்திய போது
தந்தையாக வாழ்க்கையில் உடனிருப்பேன்
என கைப்பிடித்துத் ஆறுதலளித்தவர்!
தன் குடும்பத் தலைவியாக
என்னை மாற்றி
தலைமைப் பொறுப்பை
தந்து மகிழ்ந்தவர்!
முழுமையான பெண்ணாக மாற
தாய்மையை எனக்கு
பரிசளித்த
தெய்வம்!
எனக்காக பிறந்த
என் சுவாசக் காற்றே
நீ இல்லேல்
நான் இல்லை!
எல்லாம் தந்தாய்
இறுதியாக இறப்பிலும் என்றும்
உனைப்பிரியாத வரமும்
இறைவனிடம் வாங்கித் தந்து விடு!