ஈழம்

ஆங்காங்கே கேக்கும் அழுகுரல் சத்தமும்
முடிவொன்று இல்லை என்ற முனகலும்
என் முகத்தில் அறைந்து கேட்டது
முன் நின்று போரிட்டாய்
என் ஈழம் காக்கவா?
இல்லை
என் இனம் அழிக்கவே !
எதிரி படையாய் நின்றாய்
எப்படி நினைத்தாய் இப்படி
மாறுவேடம் மாட்டுவதற்கு
அழித்து விட்டோமென்று நினைத்தாயா ?
இல்லை
அழிந்து விட்டோமென்று நினைத்தாயா ?
அடிக்கும் காற்றுக்கு
அசையும் நாணல் அல்ல
அக்கனி பிழம்பை கக்கும் எரிமலை
எப்போது வேண்டுமானாலும் வெடிப்போம்
என் இனம் காக்க!

எழுதியவர் : பழனி தங்க. மணிகண்டன் (23-May-13, 9:58 am)
Tanglish : ealam
பார்வை : 154

மேலே