என் தாய்
என் தாயே
என்னை பெற்றமைக்காக
முதல் நன்றி
மலரும் சூரியன்
மறையும் சூரியன்
இடையில் தான் பகல்
இதுபோல
பத்து மாதங்களில் பிறப்பு
சில தினங்களிலோ,
சில மாதங்களிலலோ,
சில வருடங்களிலோ இறப்பு
இதற்க்கு இடையில் தான் வாழ்க்கை
இவ்வாழ்க்கையை தந்தது நீதான்
என்னுயிர் தாயே
உனக்கு நான் என்ன கைம்மாறு
செய்ய போகிறேன்
வெயிலோடும்
மழையோடும்
கல்லோடும்
முல்லோடும்
போராடி எனக்கு சிறு
காயம் படாமல் வளர்த்த
உன்னத உறவே - உன்
பொன்னான பாதங்களுக்கு
என் கரங்களை காலனிகளாக
தருகிறேன்
நான் எத்தனை தவறுகள்
செய்தாலும் இவ்வுலகில்
என்னை மன்னிக்கும் ஒரே
நீதிபதி நீதான் அம்மா
சொந்தங்கள் மாறலாம்
மறந்தும் விடலாம்
மாறாமல் மறக்காமல்
தோல் மீதும், மடி மீதும்
போட்டு என்னை வளர்த்த
தெய்வமே
நான் அனைத்து ஜென்மங்களிலும்
உனக்கே மகனாக பிறக்க
ஆசை படுகிறேன்
என் ஆசை உள்ள அம்மா அவர்களே