சூரியன்

காலையில் கிழக்கில் தோன்றிடுவான்
தக தக வென ஜொலித்திடுவான்
தங்கம் போன்ற கதிர்ஒளியால்
தாரணி செழிக்கத் தவழ்ந்திடுவான்


ஏழு குதிரைகள் மீதேறி
பாரில் பவனி வந்திடுவான்
பம்பரமாய் நாம் சுழன்றிடவே
செம்பொன் கதிரொளி வீசிடுவான்

எழுதியவர் : திருமதி G .S . விஜயலட்சுமி (30-May-13, 4:10 pm)
பார்வை : 98

மேலே