(ஆ)தங்க கேள்விகள்
ஆயிரம் கற்று என்ன பயன் கண்டோம்
ஆக்கத்தினோடு ஆற்றியவைதான் என்ன ?
ஆசைகள் கோடி நெஞ்சினில் உண்டு -அடையும்
ஆற்றல்கள் ஏதேனும் அறிவினில் உண்டா?
ஆரோக்கியம் குன்றி அலைகிறோம் மண்ணில்
ஆசனம் ஏதேனும் செய்தது உண்டா ?-நித்திய
ஆனந்தம் எய்திடும் வழிகள் குறித்து
ஆயிரத்தில் ஒருமுறையேனும் யோசித்ததுண்டா?
ஆடலோ,பாடலோ நம்மிடமில்லை -இருப்பினும்
ஆக்கைக்கு நடனமிடும் திறனுமுண்டா ?
ஆஸ்தியின் மதிப்போ கோடிகளில் இருந்தும்
ஆராய்ந்து அனுபவிக்கும் அறிவுமுண்டா ?
ஆயுள் நோகுதே அதை நம் அககண் கண்டதா?
ஆவென வாய் பிளக்கும் போதிலும் -அதில்
ஆவின் பால் கொணர்ந்தூட்டும் போதிலும்
ஆசைகள் நம் நெஞ்சை விட்டு அகன்றதா ?
ஆவேசத்தோடு பலமுறை நாம் நடந்ததுண்டு
ஆதரவுற்றிங்கு நாம் வாழ்ந்ததுண்டா ?
ஆணவத்தை கட்டிகொண்டு அலைந்ததுண்டு
ஆண்டவனை அடைய அழுததுண்டா ?
**********************************************************************
அன்புடன்
கார்த்திக்