திருநங்கையின் ஏக்கம்

அப்பா மறுபடியும் உன் கையை பிடித்து நடக்க என்னுடன் வருவாயா ?
அம்மா உன் மடியில் சிந்து அழ மறுமுறை ஒரு வாய்ப்பு தருவாயா ?
என்னுடன் ஓடி ஆடி விளையாண்ட என் சோதரா மீண்டும் அந்த காலம் அமையுமா ?
தோழா நான் ஆணாக இருந்த பொழுது என் தோளில் கைபோட்டு நடந்தாயே
நான் பெண்ணாக மாறியவுடன் ஏன் என்னை வெறுத்து விட்டாய்.உன் அருகில் நிற்க கூட தகுதி இல்லாமல் போனேனோ ?
என்னை விழாக்களுக்கு அழைத்த என் சொந்தங்கள் இப்பொழுது ஏனோ என்னை வெறுக்கிறார்கள் ?
திருநங்கையாய் பிறந்ததால் எல்லாவற்றுமே இலக்குரோமே இன்னுமா இந்த உலகிற்கு புரியவில்லை நங்கள் கடுளின் குழந்தைகள் என்று ?
என்று பிறக்கும் வசந்த காலம் ?

எழுதியவர் : பானு திருநங்கை (30-May-13, 4:40 pm)
சேர்த்தது : Thiru Nangai
பார்வை : 128

மேலே