தூர விலகு

எப்படி உனக்கு
என்னை தெரிகிறது
என்னையே எனக்கு
சரியாக தெரியாத போது
என்னோடு சிரிக்க
எப்படி உன்னால் முடிகிறது
உள்ளுக்குள் நான்
அழுது கொண்டிருக்கும் போது.
எப்படி என்னை பற்றி
பேசமுடிகிறது
என் உண்மை நிலை
எனக்கே தெரியாத போது.
என்னைப்பார்க்க உனக்கு
எவ்வாறு முடிகிறது
நான் ஒரு நிலையற்ற
விம்பம் என்று தெரிந்த பின்னும்.
உன்னிடம் இருந்து
விலகி விட நினைக்கிறேன்
உன் அன்பை மறக்க முடியவில்லை!
முதன் முதல்
ஓர் உண்மை சொன்னேன்.
நீ அதை ஏற்று கொள்ள வில்லை.
அல்லது என் வார்த்தைகளை
உள் வாங்காதது போல்
நடித்துக் கொண்டாய்.
நான் என் இறுதி நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
உன் இதயத்தை காயப்படுத்த
எனக்கு துணிவில்லை.
இருப்பினும் யதார்த்தத்தை
திரும்பிப் பார்க்கிறேன்.
நீ என்னில் இருந்து விலகிச்செல்
இந்த புத்தகத்தை நிரந்தரமாய்
மூடி விடு.

எழுதியவர் : சிவநாதன் (1-Jun-13, 10:29 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 202

மேலே