@@@பிரார்த்தனை @@@

ஆலயத்தினுள்ளே
அபிஷேகத்தோடு
ஒருவனின்
பிரார்த்தனை

நான் செய்த
துன்பங்களை
மன்னித்துவிடு இறைவா !

ஆலயத்தின் வெளியே
அவசரமாய்
பாதிக்கப்பட்டவனின்
பிரார்த்தனை

என்னை இப்படி
துயருற வைத்தவனை
மறந்தும்
மன்னித்திடாதே இறைவா !

அவரவர்களுக்கு
அவரவர் பிரார்த்தனைகள்
நியாயமானதே ...

... கவியாழினிசரண்யா ...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (2-Jun-13, 12:53 pm)
பார்வை : 120

மேலே