' ராமச்சந்திர மூர்த்தி திட்டம் ' என பெயர் மாற்றியாவது செயல்படுத்துங்கள் - ஜெ விடம் கெஞ்சும் கருணாநிதி...?!

90 வயதை தொட்டுவிட்ட திமுக தலைவர் மு.கருணாநிதி தனது பிறந்த நாள் விழாவில் இவ்வாறு கூறினார். ஏற்புரை ஏற்கும் முன் மறக்காமல் ஒரு உண்டியலை வைத்து விட்டார் அறிவாலய வாசலில். உடன்பிறப்புகள் காசு பணத்தை கொட்டி உண்டியலை நிரப்பி விட்டார்கள். வசூலான தொகை 1 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 158 ரூபாய் என்று சேர்ந்து விட்டது. மேலும் பல செக்குகள் போட்டப்பட்டுள்ளன. செக்கின் தொகை விபரம் வெளியிடப்படவில்லை. போகட்டும் இவைகள்.

கடந்த மூன்று நாட்களாக தூக்கம் இல்லாத இரவுகளாக சென்றன. தூங்கி வழியும் கருத்துக்கள் இருந்தால் விலக்கி விட்டு, போர் வீரர்களாகும் கடமைக்கு ஆட்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ( ஆமாம்...எதற்கு தூக்கம் இல்லை...எதற்கு போர் வீரராக வேண்டும்...? )

தமிழ் நாட்டை வளப்படுத்தும், அன்னியச் செலவாணி ஈட்டித்தரும் சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போட்டது மாத்திரம் அல்ல, வயிறு எரியச் செய்யும் செயலாக சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் கிடப்பில் போட்டுவிட்டோம் என்று கூறி அந்த திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இது ராமர் கட்டிய பாலம். அதை இடிக்கக் கூடாது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்கிறார்கள்.

ராமர் பாலம் மற்றும் சேது சமுத்திர திட்டம் குறித்து உச்சநீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது. அது பின்னர் கேள்விக் குறியாக மாறி தமிழர்களின் எதிர்காலம், வாணிபத்தின் எதிர்காலம் வினாக்குறியாக மாறி தொங்கப்போகிறது. ராமர் பாலத்தை மாற்ற முடியாது என்றால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள், சேது சமுத்திர திட்டம் என்பதற்கு பதிலாக
" ராமச்சந்திர மூர்த்தி திட்டம் " என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு தேவை அந்த திட்டம். பெயரை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்றார் மு.க..

ஆனால் எங்களுக்கு திட்டம் தேவை. அதற்கு அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். செய்யாவிட்டால் திமுக வின் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றை கூட்டி, தோழமைக் கட்சியினரையும் சேர்த்துக் கொண்டு, தமிழகத்துக்கு இந்த திட்டம் வரவேண்டும் என்று எண்ணுகிறவர்களின் ஆதரவை திரட்டி சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போடாதே என்று கோசம் எழுப்பி மாபெரும் போராட்டம் நடத்துவோம். இது தான் எனது பிறந்த நாள் விழா அறிவிப்பு.

சேது சமுத்திர திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி செயல்படுத்த முன்வராவிட்டால் போர், போர். போர்... இங்குள்ள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என கருணாநிதி போர் பரணி பாடினார்.

ஆக, உண்மையிலேயே தமிழ் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறாரா முக...? அப்படியென்றால் முல்லைப்பெரியாறு, காவிரி, கூடங்குளம், காவிரி ஆற்றில் மீத்தேன் வாயு, மலைகளை உடைத்து தோரியம், பழங்காலத்து தமிழ் சமண குகைகள் உடைப்பு ( கிரானைட் ), நியுற்றினோ திட்டம், தமிழகத்தில் ஓடும் ஓடாத ஆறுகளில் எல்லாம் மணலை அள்ளிச் சென்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஆறுகளை கொன்று அழித்தது. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சிந்தனை செயல் அனைத்தும் ஊழல் செய்வது, சொத்து சேர்ப்பது, வெளிநாடுகளில் தீவுகள் வாங்குவது என்று இருக்கையில், தமிழர்களின் நலம் வினாக்குறியாகி தொங்கப்போகிறது என்று கூறுவதை என்ன சொல்வது...? கலைஞர் என்றால் வியப்பு உழைப்பு பிரமிப்பு என்று திராவிடர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலா போய்விடும் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Jun-13, 3:50 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 81

மேலே