ஆர்.எஸ்.எஸ். குழு இலங்கை செல்கிறது...எதற்கு... ஏன்...?

சிவசேனா மற்றும் இவர்களின் ஆதரவாளர்களான ஆறு பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. ரவிசங்கர் பிரசாத், சுரேஷ் பிரபு, ராம் மாதவ், மோனிகா அரோரா, ஸ்வபன் தாஸ் குப்தா மற்றும் விவேக் கட்ஜு ஆகியவர்கள் இலங்கை செல்கின்றனர். ஜூன் 4 - ம் தேதி புறப்பட்டு ஒருவார காலம் தங்கியிருந்து மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே என்று சந்திப்பும் விருந்தும் உண்டு களித்து வருவார்கள் என்று நம்பலாம்.

முதலில் இந்த ஆர்.எஸ்.எஸ். குழுவை இலங்கை வந்து சந்திப்பதற்கு கொழும்புவில் உள்ள பண்டராநாயக்க சர்வதேச கல்வி மையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வழமைப் போலவே, டக்லஸ் தேவானந்தா இலங்கை முஸ்லிம் அமைச்சர் ரவுப் ஹக்கீம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுக்காப்புத் துறை அதிகாரிகள் மற்றும் எல்.எல்.ஆர்.சி. கமிட்டியை சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான காரணத்தை சொல்லாமல் இவ்வாறு சொல்கிறார்கள் இந்த இலங்கை பயணத்தை...இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் தமிழர்களுக்கான வீட்டுவசதி, மறுவாழ்வு திட்டங்கள், மறுகுடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இந்திய குழுவினருக்கு விளக்கும் வகையில் இந்த கலந்தாய்வு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே இரண்டு எம்.பி.க்கள் குழு சென்று வந்துவிட்டன.ரவிசங்கர் பிரசாத் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.குழுவையும் சேர்த்தால் இதுவரை மூன்று குழுக்கள்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானத்தை இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்ற தமிழக எம்.பி.க்கள் முயன்ற போது, முக்கிய எதிர்க்கட்சியான பாஜக மௌனத்தை கடைபிடித்தது. இந்த மௌனத்தை உடைப்பதற்கு மகிந்த கும்பல் ஏற்பாடு செய்துள்ளன என்று கருதலாமா...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Jun-13, 2:24 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 73

மேலே