கண்ணீர் தேசத்தில் பெண்மை

--------------சுதந்திர இந்தியாவின் சுதந்திரமில்லா பெண்மை -----

மனித குலம் தோன்றலின் ஆதாரம் கருவறை
ஆனால் பெண் குலத்திற்கு அதுவே கல்லறை

படித்து பட்டம் பெற இயலாத எங்களுக்கு இந்த
சமுதாயம் கொடுத்த பட்டங்கள் எத்தனையோ

ஆம்- திருமணம் என்ற பெயரில் முதலில் கிடைக்கும் அடிமை பட்டம்.

மணந்த கணவனை இழந்து பெற்றோம்
விதவை பட்டம்.

வயிற்றில் சுமையில்லாமல் வாழ்வில் சுவை இல்லை -ஆம் சுமையாய் பெற்றோம்
மலடி பட்டம்

உணர்வுகளை வெளிபடுத்த முடியாத ஊமைகளாகிய நங்கள்
சொந்த வீட்டில் வாழும் அகதிகள்

திருமணம் என்ற பெயரில் விலை பேசி விற்கப்படும் பொம்மைகள்

இன்றளவும் பெண்மையின் நிலை இது தான் சுதந்திர இந்தியாவின் ஒரு சில கடைகோடிகளில்




நன்றிகளுடன்
-சிக்கந்தர் பூட்டோ-

எழுதியவர் : சிக்கந்தர் பூட்டோ (6-Jun-13, 1:06 am)
சேர்த்தது : Sikkandar Bhooto
பார்வை : 114

மேலே