ஆசைப்படுகிறேன் - சி.எம் ஜேசு

சிகரத்தில் ஏறி கைக் கால்கள் மடித்து
தவம் செய்ய ஆசைப்படுகிறேன்
இமயத்தில் திரிந்து தேவதைகளைக் கண்டு
உளம் பூரிக்க ஆசைப்படுகிறேன்
உண்மைகளைப் பேசி நன்மைகளைச் செய்து
மக்களை மகிழ்வாக்க ஆசைபடுகிறேன்
தன்மையாய் இருந்து வன்மைகளைத் தவிர்த்து
உலகை வளம் வர ஆசைப்படுகிறேன்
இருக்கும் வீட்டை போகும் இடங்களை
தூய்மையாக்க ஆசைப்படுகிறேன்
கோபத்தைத் தவிர்த்து - நல்மனத்தை காணும் தெய்வீகம் பெற ஆசைப்படுகிறேன்
காட்டைக் களை எடுத்து பயமில்லாமல்
நடைபயிற்சி செய்ய ஆசைப்படுகிறேன்
ஊர்களை சீர்படுத்தி உழவர்களை
உயர்ந்தவர்களாக மாற்ற
ஆசைப்படுகிறேன்
அழகு மிளிரும் தெருக்கள் அமைத்து
ஊர்களை உருவாக்க ஆசைப்படுகிறேன்
சட்டங்கள் இல்லாமல் திருத்தங்கள் செய்யும்
அரசாட்சிக்கு ஆசைப்படுகிறேன்