சார் நீ

நீதான் யார் என்று
நான் அறியேன்.
உன் நிழல் தான்
எதுவென்று நான்
அறியேன்..

உன் கண்ணில்
என் காதல்
பார்த்ததில்லை.
உன் உதட்டில்
என் எச்சங்கள்
படிந்ததும் இல்லை ..

உன் கன்னங்கள்
நீ முகர்ந்தது இல்லை
உன் மடியில் நான்
தலை சாய்ந்ததும் இல்லை

உன் மனதோடு
என் மனது பேசியதில்லை
என் கண்ணீர் துளி
உன்னில் பட்டு
கரைந்ததும் இல்லை

இப்படி இருக்க
ஏன் ?
உனக்காக நான் அழுகிறேன்
உன்னை தினம் நினைக்கிறேன்.
உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்
நீ யார் எனக்கு .

எழுதியவர் : ராதிகா .v (7-Jun-13, 9:08 pm)
Tanglish : saar nee
பார்வை : 57

மேலே