!!!===(((பச்சைத்தமிழன்)===!!!
ஆரியனின் அஸ்திரத்தில்
அகப்பட்ட ஆதியினம்
அவன்சொன்ன புரட்டுகளில்
புத்தியதை இழந்ததுவே...
பத்து அவதாரமாம்
பாதாளத்தில் ஓர்லோகமாம்,
மூத்த குடியோனும்
மூடனாகிப் போனானே...
அயோத்தியும் வானரமும்
படைகொண்டு வந்தபோதும்
வீறுகொண்டு களம்கண்ட
ராவணனே அவன்த்தமிழன்...
புத்திக்கண்ணைத் திறக்காமல்
நெற்றிக்கண்ணைத் திறந்திடனும்
குற்றம் குற்றமெண்ன்றே
கோசமிட்ட அவன்த்தமிழன்...
தமிழை தமிழாக்கி
தாய்மொழியை உயிராக்கி
தொல்காப்பியம் படைத்தானே
அவனல்லோ செந்தமிழன்...
துரோக விபிசனர்கள்
பெருகிவிட்டக் காரணத்தால்
ஈயத்தை காய்ச்சிஊற்றி
இனியெந்த பலனுமில்லை...
மூடத்திலே மூழ்கியவன்
முத்தெடுக்கப் போவதில்லை...
இந்திரசித்துக்களை
சூதகத்தால் அழித்தாலும்
பச்சைத்தமிழனவன்
பார்கடந்து நின்றிடுவான் - எங்கள்
பாமாலை கண்டிடுவான்...!!!
------------------நிலாசூரியன்.