கல்லூரிக் காலம்

இந்தப் பயிற்சி பட்டறையில் பயின்று
இசையறிவை சுழன்று கூராக்கி
சப்ப்தமெனும் சங்கீதத்தை சந்தோஷக் காற்றாய் மாற்றி

மனமெனும் உருவுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து
கற்பித்து உற்பவித்து கானம் எனும் இறையை
உலகினோர்க்கு ஈன்று வாழ்ந்த மறைந்த வாழும்
சங்கீத இசை விற்பனர்களுக்கும்

தோழர் தோழிகளே உங்களுக்கும்

கலைகளை கைநிறைத்து
கவலைகளை களைந்தெறியும்
எழுத்தாளராய் இசையாளராய் நம்

ஓசையின் ஆசைகளை உலகினோர்க்கு எடுத்திசைக்கும்
முரசாய் இன்றைய கவியரங்கின் அரசாய்
அமர்ந்திருக்கும் தோழர் பா .ஏகலைவன் அவர்களுக்கும்

இணைந்து கரம் கோர்த்து
வேந்தர் விட்டுச் சென்ற தேரில் படர்ந்த தோழர்
முல்லை வேந்தன் அவர்களுக்கும் வணக்கம்

கல்லூரிக் காலம்
இது தொழில் அறிவின் ஒரு தொடக்கம்
தனிமை உணர்வுக்கான இறுதி உறுதிக்கான அடக்கம்

தினமனுதினம் சங்கமித்து
உறவுகளாகி அண்ணனாய் தங்கையாய்
தம்பியாய் மாமனாய் மச்சானாய்

துணையாய் இணையாய்

தோழியாய் தோழனாய் நம்மை வார்த்தெடுத்த
உலகின் உன்னத உறவுகளின் பிறப்பிடம்
நம் கல்லூரிக் காலம்

அரியாப் பாடங்கள் தெரியா திகைப்புகளுடன்
இணைந்தாலும் நெறியாய் வாழ நிறைவாய்
இசை அறிவீன்றக் காலம் கல்லூரிக்காலம்

மீசை முளைத்த இளைஞனாக
ஆசை தெறிக்க சுறுசுறுப்பாக சேமிப்பில்லா
செல்வந்தனாக என்னை மாற்றிய கல்லூரிக்காலம்

யாரென்று தெரியாமலே அறிமுகமாகி
நம் உயிர்கள் அனைத்தும் ஒன்று என்ற நட்பில்
கடந்தக் கல்லூரிக் காலம்

ஊரென்று பாராமல் உறவென்று அறியாமல்
நட்புணர்வை மட்டும் தந்தக் காலம்
நம் கல்லூரிக் காலம்

மரக்கிளைகளில்
அமர்ந்து புத்தகம் படித்து வாயிலின்
வயலின் திண்ணையிலமர்ந்து பாட்டு படித்து

படுத்துறங்கி தூக்கம் களைத்து - கடல்
அலைகளுக்குள் சென்று குதித்து அகமகிழ்ந்த காலம்
நம்கல்லூரிக் காலம்

ஒருவர் பாக்கெட்டில்
இருவர் கைவிடும் உரிமையினைக் கொணர்ந்தக்காலம்
கல்லூரிக் காலம்

மரமென்ற கல்லூரியில்
கிளைகளாய் ,இலைகளாய் பூக்களாய் காய்களாய்
மலர்ந்து உதிர்ந்து மீண்டும் மீண்டும்
பிறக்கும் காலம் கல்லூரிக் காலம்

விலையில்லா உணவு
எல்லையில்லா மகிழ்வு என உண்டு புரண்டு
சிறு சிறு மோதல்கள் காதல்களோடு வாழ்ந்தக் காலம்
நம் கல்லூரிக் காலம்

கூடிக் குழுக்களாய் படம் பிடித்து
ஆடி ஓடி தோழர்களோடு உறவாடி
நாடித் தேடி இசையறிவுகளை பரிமாறிக்கொண்ட காலம்
நம் கல்லூரிக் காலம்

இது முடிவுறவில்லை
மீண்டும் மீண்டும் ஓசை எனும் ஆசை இசை சங்கமத்தால்
முளைத்தெழும் தேக்குமர கன்று - வாழ்த்துக்களுடன்

உங்கள் சி .எம் .ஜேசு பிரகாஷ் - 06 .01 .2018
இசையாசிரியர் இசைக்கலைமணி இசையமைப்பாளர் எழுத்தாளர்

( குறிப்பு இதை வருகிற புத்தாண்டில் என் இசைக்கல்லுரியில கவியரங்கத்திற்காக பாட உள்ளேன் அதற்காக சற்றே திருத்தும் செய்திருக்கிறேன் )

எழுதியவர் : சி.எம் .ஜேசு (8-Jun-13, 12:58 pm)
பார்வை : 476

மேலே