தெய்வத்தைத் தேடாமல் தொழுதேன் - சி.எம் .ஜேசு
தேடும் இடங்களில் நீ இல்லை - நான்
வாழும் இடங்களில் நீ இருந்தாய்
தாயாக நீ இருந்தாய்
சேயாக உனைத் தொழுதேன்
தந்தையாக நீ இருந்தாய்
நண்பனாக உனைத் தொழுதேன்
குருவாக நீ இருந்தாய்
அறிவினைப் பெற்றவனாய்
உனைத் தொழுதேன்
அல்லலுற்று, துயருற்றேன் ஆறுதல்
தரவந்த நண்பனாய் உனைத் தொழுதேன்
என்னைப் படைத்து
என்னருகில் இருக்கும் உன்னை
தேடாமலே தொழுதேன்