எழுதியே ஆக வேண்டும்

எண்ணையும், திரியும்
எரியா விளக்கில் இருந்தாலும்
எரியூட்டும் தீக்குச்சி
தீண்டாமல் ஒளியேது?
காடும் மலையும்
கணக்கற்று கிடந்தாலும்
கடந்து செல்ல பாதை
இல்லையென்றால் வழியேது?
எண்ணும் எழுத்தும்
எண்ணற்று இருந்தாலும்
எடுத்தாளும் சொல்
இல்லையென்றால் மொழியேது?
எழுத்துக்களே - நான்
எழுதியே ஆக வேண்டும் - ஆகவே
கழுவும் நீரில்
நழுவும் மீனாய் என்னை
தழுவாமல் போகாதே
வழுவாமல் வந்துவிடு - என்மனம்
அழுவாமல் பார்த்து விடு - உன்னகத்து
மழுவாமல் மலர்கின்றவர்களில்
நானும் ஒருவன் - என்னை
நாளும் நகர்த்திக்கொண்டே இரு
நான் இன்னும் இறக்கவில்லை - நீ
உள்ளவரை எனக்கு இறக்கம் இல்லை-என்
உணர்வுகளுக்கு உறக்கம் இல்லை

எழுதியவர் : ச.சங்கு சுப்ரமணியன் (10-Jun-13, 8:47 pm)
பார்வை : 78

மேலே