தமிழ் - சி.எம்.ஜேசு

தாய் தமிழே !
நான் உன்னை
வணங்குகின்றேன்
தேன் தமிழே !
என் எழுத்தினால் உன்னை
சுவையாக்குகின்றேன்
தூய தமிழே !
என் வாழ்வில் உன்னை
தூய்மையாக்குகின்றேன்
ஊன் தமிழே !
என் உருவத்தினால் உன்னை
வடிக்கின்றேன்
கலைத் தமிழே !
என் கலைகளால் உன்னை
மகிழ்விக்கிறேன்
உயிர்த் தமிழே !
என் உயிரை உனக்கு
அர்ப்பணிக்கிறேன்
விதைத் தமிழே !
நான் போகுமிடமெல்லாம்
உன்னை விதைக்கின்றேன்