என் இனிய தென்றலே
என் வீட்டு சன்னலைத் தொட்டு விட்டு
என்னிடம் எதுவும் கேட்காமல்
திரை சீலையோடு என் முகத்தில்
வருடிய போதும்..!
வானவில்லிடம் வண்ணச் சீலைகள் நெய்து
வானில் நீந்தி மகிழ்ந்து கொஞ்சி குலவிடும் போதும்..!
வானில் வட்டமிடும் பறவைகளிடம் கோரிக்கை
விண்ணப்பம் அனுப்பிய போதும்...!
மழைத் தூறல்கள் தன் மேல் விழுந்து உன்னோடு
சிலிர்த்திடும் போதும் ரசிக்க மனம் லயிக்கின்றதே...!
புல் நுனியிலும் கரையில் ஒதுங்கும் அலைகளிலும்
உன் மேனி பட்டு உடைத்து உயிர் கூச்செரிக்கின்றாயே...!
மீண்டும் மீண்டும் என் சன்னலைத் தொட்டுவிட்டும்
நீண்ட ஸ்பரிசம் மயக்கும் வரையில் ....
போதும் போதும் என் இனிய தென்றலே !