என்னை செதுக்கிய "தனிமை"
----------------------தனிமை ---------------------------------------
என் மெய்பிம்பத்தை பிரதிபலித்த போலி கண்ணாடி
--சிந்திக்க நேரம் தந்த கடிகாரம்
சிரிப்பை மரந்ததென்னவொ பல மணி நேரம்
உணர்வுகளை உணர்த்திய காலச்சக்கரம்
--இறுமாப்பை உடைத்த உளி
உள்ளக்குமுறல்களை தீட்டிய பேனா
--அன்பின் ஆழத்தை அளவிட்ட கருவி
மானுடம் புரிய வைத்த மதி
--மனிதன் மாண்பினை உணர்த்திய விதி
இலட்சிய கோட்டைகளை கட்டிய கனவு
--எனக்கான பாதையை காட்டிய வழிகாட்டி
அதன் பயணத்தில் என்றும் எனக்கு தெம்பூட்டி
இவை அனைத்தையும் உணர்த்திய நீ (தனிமை)
உணர வேண்டிய என் உள்ளக்கிடக்கைகள், இதோ
அன்னையின் ஸ்பரிசம்
--தந்தையின் தைரியம்
தூக்க சொல்லி உயர்த்திய
--மருமகளின் கைகள்
அவள் முன்னே தூங்காமல் நடித்த
--எனது கண்கள்
தோழனின் நேசம்
--தோழியின் ஆறுதல்
குதூகலம் கண்ட உள்ளூர் திருவிழா
--நண்பருடனான அரட்டை, கிண்டல், நையாண்டி
இவை அனைத்தும் இழந்தவனாய் உன்னால்
--பலவும் உணர்ந்தவனாய் உன்னால்
வாழ்த்தவும் இல்லை தூற்றவும் இல்லை
--வணங்குகிறேன் உன்னை "என் தனிமையே"
நன்றிகளுடன்
ஜா. சிக்கந்தர் பூட்டோ