இப்போதும்.....

தேவையாய் இந்த வேதனை.....

அந்த ஒலி,
அந்த ஒலி வந்த திசை,
அந்த திசையில் இருந்த வாய்
அந்த வாய் இருந்த நீ,,,

ஒலித்துகொண்டே இருக்கிறது
ஓயாமல்,,,

எங்கிருக்கிறாய் ஓசையற்று
மெளனம் பூசியதன் காரணம்
தூரம்,

தூர இருக்கும் துயரம்
துயரம் சுமக்கும் காலம்,
காலமெல்லாம் மறக்காது,

காலம் சுமக்க கடினமாய்
கையில் தந்த போது,

நின்று வேடிக்கை பார்த்த
நீ....

திரும்ப திரும்ப அசை போடும்
அந்த ஒலி,ஒலிவந்த திசை
காற்றில் மிதக்கிறது
கண்ணில் காணாது.??

எழுதியவர் : சபீரம் sabeera (12-Jun-13, 1:48 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : ippothum
பார்வை : 73

மேலே