அனைத்தும் அறிவியலே!(கட்டுரைத் தொடர்) -2

2.உயிர்களுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?
*****************************************************************
கடவுள் மறுப்பாளர்களுக்கும் கடவுள் உண்டு என்பவர்களுக்கும் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் ,கடவுளை நம்புகிறவர்களால் அதிகம் கேட்கப் படும் கேள்வி என்ன தெரியுமா?
கடவுள் இல்லை என்றால் உயிருள்ள பொருட்கள் உலகத்தில் எப்படித் தோன்றியிருக்கும் ?என்பதுதான்.
உயிருள்ள ,உயிரற்ற இரண்டு பொருட்களுமே தோன்ற பொருட்களின் மூல அணுக்கள் இருந்தால் போதுமானது.எந்த ஒரு பெரிய பொருளை எடுத்துக் கொண்டாலும் அது அதே போன்ற மிகச் சிறிய நிறைய அணுக்கள் ஒன்று கூடி உருவாகிறது என்பது அறிவியல்.
பூமி,கோள்கள்,தாவரங்கள் விலங்குகள்,பறவைகள் ,மனிதர்கள் அனைத்துமே இந்த மாதிரியான வேதியல் மூல அணுக்கள் ஒன்று கூடி உருவானவைதான்.வேதியல் பொருட்கள் இல்லாமல் உலகம்,கோள்கள்,வான் வெளி எதுவுமே இல்லை.நம் புவியில் எடுத்துக் கொண்டால் நாம் போடுகிற துணிமணிகள்,கட்டுகிற வீடுகள்,அவற்றிற்கு அழகு சேர்க்கும் பொருட்கள்,சாப்பிடுகிற சாப்பாடு,ஏன் மனிதர்கள் உள்ளிழுக்கும் காற்று, நீர்,மனித,விலங்கு,மற்றும் தாவர உடலங்கள் அனைத்துமே வேதியல் பொருட்களால் உருவானவைதான்.
இந்த வேதியல் மூலக் கூறுகளில்,புரதம்,கொழுப்பு,மாவுப் பொருட்கள்,கொஞ்சம் உலோகச் சத்துக்கள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கும்போது உயிர்கள் உண்டாகத் தேவையான
ப்ரிமுவல் சூப் என்ற ஒரு பொருள் உண்டாகிறது.
இந்த சூப் மூலமாகத்தான் உயிர்கள் உண்டாகின்றன என்று உயிர் வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து,ஆய்வகங்களில் உயிர்களை வடிவமைக்கவும் துவங்கியிருக்கிறார்கள்.சில சமூகப் பிரட்சினகளுக்காக இந்த வித ஆராய்சிகளுக்குத் தடையும் விதித்திருக்கிறார்கள்.
ஒரு செல் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி உருவாக்கும் குளோனிங் வழிமுறை இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.
உயிர்கள் உருவாக ஒரு எளிய எடுத்துக் காட்டு கொடுக்க விழைகிறேன்.
ஒரு நான்கு நாட்கள் குளிக்காமல் இருந்து பாருங்கள்.உங்கள் தலையில் பேன் உற்பத்தியாகி அரிக்க ஆரம்பிக்கிறதா இல்லையா? இதே தலையை நல்ல ஷாம்பூ போட்டு தினமும் குளித்து சுத்தமாக வைத்திருந்தால் தலையில் பேன் வருகிறதா? கண்டிப்பாக வராது.இப்போது கூறுங்கள்.பேன் ஒரு உயிர்தானே! அதை உருவாக்கியதும் ,உருவாகாமல் தடுத்ததும் நாம்தானே. இந்த உயிர் உற்பத்தியில் கடவுள் எங்கே இருக்கிறார்?
சூரியனில் உள்ள அதிக வெப்பம் காரணமாக தெறித்து விழுந்த ஒரு துளிதான் புவி.மற்ற கோள்களும் இப்படி உருவானவைதான்.சூரியன் கூட அதைவிடப் பெரிய விண்மீன்கள் எதிலிருந்தாவது இப்படித் தெறித்து விழுந்ததாகத் தான் இருக்கும்.அப்படித் தெறித்து விழுந்தவைகள் மேலும் மேலும் சிதறிப் போகாமல் இருக்க தனக் கென்று ஒரு ஈர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு வெளியில் உலவிக் கொண்டிருக்கின்றன.இப்படி சூரியனிலிருந்து தெறித்து விழுந்த புவி கொழகொழப் பான களிமண் உருண்டையாக இருக்கும்போது,அதிலுள்ள ஒரு சில அணுக்கள் ஒன்று கூடி உருவானவைதான் உரிர் அணுக்கள்.அவை பல நுண்ணுயிர்களாக வடிவமெடுத்து,காலமாற்றத் தால் பல்வேறு பரிணாமங்களை அடைந்து பெரிய உயிர்களாக மாறின என்பது நாம் அறிந்ததே.
எனவே ஒரு உயிர் உருவாக தகுந்த சூழ்நிலைகளில்,தகுந்த வேதிப் பொருட்கள் இருந்தால் போதுமானது.கடவுள் கோட்பாடுகளுக்கும் உயிர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது என் வழி.
----------------------இன்னும் பேசுவோம்------
நிறைய நிறைய அன்புடன்
ஆனந்த்
(வேதியல் என்ற இடங்களில் வேதியியல் என்று மாற்றிப் படிக்கவும்)