கணினி என் கண்மணி

புத்தம் புதிய கண்மணி
புதுமையும் செய்வாய் பொன்மணி

தகவல் தருவாய் தினப்படி
தரணியைச் சுருக்குவாய் எப்படி?

வங்கிக் கணக்கும் அத்துப்படி
வணிகப் பணியும் உன் கைப்பிடி

இணையம் ஒன்றே போதுமே
எதைத் தொட்டாலும் தெரிவாயே

உலக நடப்பையும் கூறிடுவாய் தினப்படி
உதவியும் நட்பும் உன் எண்ணப்படி

நட்பைப் பேணிக் காப்பாய் ரகசியமாய்
நல்ல செய்திகள் தினம் தருவாய்

முறையாய் நீயும் கற்பிப்பாய்
முழுதாய் உலகம் கற்றுக் கொள்வோம் ...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 10:08 pm)
பார்வை : 197

மேலே