பாத அணிகள்
நீ மட்டும் என்னைச்
சுமக்கின்றாய் எப்போதும்
வெயிலும் உன்னைச் சுடவில்லை
மழையும் உன்னைச் சுட வில்லை
காடு மேடெல்லாம் சுற்றி சுற்றி
மணல் மலையென துள்ளிக் குதித்து
உன்னால் என்னை விடவும் மனமில்லை
பிரியவும் மனம் வெறுக்கவில்லை
கல்லும் முள்ளும் மெத்தையென
என்னைக் கண்போல் காக்கின்றாயே !