மயங்கிய மனம்

மறைத்து விட்ட
மனத்தை
மன்னித்து
விட்டு விட்டாய் ...
மறக்க இயலா
மங்கையடி நீ ...
மதிகெட்டு
இருந்தும்
மணக்க துடிக்கிறேன்
உன்னை ...
மகுடைப்
போல
ஆட்டவைக்கிறாய்
என்னை
உன்னை
அறியாமலேயே ...
மனதிற்குள்
உன்னை வைத்து
மணமாக
சுவாசிக்கிறேன் ...
என்னுள்
நானாக இல்லை
நீ மட்டும்
இருக்கிறாய்
நிம்மதியாக ..!