அதிகாரி ஏமாற்றினார் ...!!!

நல்ல மழை
வரும் என்று கூறி
வானிலை நிலைய ..
அதிகாரி ஏமாற்றினார் ...!!!

நதிநீர் கிடைக்கும்
என்று ஏமாற்றிய
நதிநீர் ஆணைக்குழு ...!!!

நல்ல விலை...
தருவதாய்ச் சொல்லி
ஏமாற்றும் அரசியல்
வாதிகள்..!

எல்லாவற்றையும் ..
நம்பி ஏமார்ந்த என் ..
குடும்பம் மரணத்தின் ..
விழிம்பில் ..
விவசாயியாக பிறந்தது ..
என் குற்றமா ...??

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (13-Jun-13, 8:40 pm)
பார்வை : 117

மேலே