வானம் ஒன்றும் தூரம் இல்லை
சுறுசுறுப்பாய் நீ இருந்தால்
சூரியனும் சூட்டிப்பாகும்
ஊக்குவிக்க உன்னைவிட்டால்
உலகினிலே யாரு தோழா...?!
உன் இமைக்குள் விடியல் உண்டு
உணர்ந்து கொண்டால் போதும் நன்று
எழுந்து விடு போதும் தூக்கம்
அளந்து விடு வானம் பக்கம்