ஒப்பாரி சி.எம்.ஜேசு

வேதனைத் தாளாது
வாழ்ந்தவர் வீழ்ந்த துக்கம்
தொண்டை அடைத்து
அழுவோர்க் குழுமி
வட்டமாய் அமர்ந்து
தோள்களில் கைகள் இணைந்து
சிரங்கள் பூமி பார்க்க
வழியும் விழிநீர்த் துடைத்து
ஒழுகும் மூக்கினால்
மனத் துயரங்கள் சிந்தி
மாண்டவரை மீண்டெழச் செய்யும்
மனிதனின் இறுதி துயில்
ஒப்பாரி .