மரணம்

சிலருக்கு
விதி கொடுத்தனுப்பும்
விடுதலைப்பத்திரம்.

இருளில் கழியும் வாழ்வில்
இறுதியில் வரும் வெளிச்சம்.

முடிவு தெரியாத
சூனியச் சுற்றுலாவுக்கு
முதற்கட்ட அழைப்பு.

இறைவனும் மரணமும்
இயல்பிலே ஒன்று தான்.

இரண்டும்
எளிதில் வசப்படுவதில்லை.
புறக்கணிப்பவரையும்
புறக்கணிப்பதில்லை.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (19-Jun-13, 12:16 pm)
சேர்த்தது : L Swaminathan
Tanglish : maranam
பார்வை : 83

மேலே