கருத்து சுதந்திரம் என்றால் என்ன..? சிறு விளக்கம்..!

ஒருவர் ஒரு கருத்தை சொல்லுவதற்கு உரிமை உண்டு...அந்த கருத்து ஏற்கனவே இருக்கும் கருத்துக்களை செழுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்...கருத்துக்கு எதிர் கருத்து என்று அல்ல....!

கருத்துக்கள் சொல்லும் ஒருவருக்கு அதை செயல்படுத்தும் உரிமையும் உண்டு..சொல்லப்பட்ட கருத்தும் அதன் நடைமுறையும் ஏற்கனவே உள்ள கருத்துக்களின் உயரிய பண்பாக இருக்க வேண்டும்...காட்டாக,

ஒருவர் கொடைக்கானல் மலையில் உள்ள சூசைட் பாயிண்டில் குதிக்கலாம் ஒன்றும் நடக்காது என்கிறார், நான் சொல்கிறேன் அந்த சூசைட் பாயிண்ட் - டில் குதித்தால் உயிர் போய்விடும் என்று, அவரின் கருத்துக்களை மறுத்து சொல்கிறேன்..ஆக, அவரின் அந்த குதிக்கும் கருத்தை செயல்படுத்தவும் முனைகிறார்...என் கைகளை பிடித்துக் கொண்டே...

நான் சொல்கிறேன்..அய்யா உங்கள் கருத்தின் செயலுக்கு ஏன் என் கைகளை பிடித்து இழுக்க வேண்டும்..? என் கைகளை விட்டுவிட்டு உங்களின் கருத்துக்களை செயல்படுத்துங்கள் என்று கூறுகிறேன்...

இதில் எந்த அளவுகோலை கருத்து சுதந்திரத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் எடுத்துக் கொள்வீர்கள்..?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Jun-13, 4:40 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 706

சிறந்த கட்டுரைகள்

மேலே