உன்னை நீயே
உலகம் கண்டு வியந்தேன்
உலாவத்தான் முடியவில்லை !
மற்றவர்களை நம்பினேன்
மற்றவராக்கப் பட்டேன் !
எதிரிகளை நம்பினேன்
ஏமாற்றம் அடைந்தேன் !
என்னில் தன்னை உணர்ந்தேன்
என்னையே நம்பினேன் !
என் மனம் சொன்னது
உன்னை நீயே நம்பு !
உலகமே !
உன் காலடியைத் தேடி
வியங்கி வணங்கும் !